

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் தனிப் படை போலீஸார் நேற்றும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் இன்ஜினீயர் சுவாதி கொலை செய் யப்பட்ட வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன் பிடிபட்டார். தற்கொலை முயற் சியில் ஈடுபட்ட அவர், பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். உடல்நிலை தேறிய அவரி டம் தனிப்படை போலீஸார் வாக்கு மூலம் பெற்றனர். திருநெல்வேலி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராம்தாஸ் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் மாலையில் ராம்குமார் சென்னைக்கு கொண்டு செல்லப் பட்டார்.
ராம்குமாரிடம் விசாரணை நடத்த சென்னையிலிருந்து வந்திருந்த நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் தேவராஜ் தலை மையிலான தனிப்படையினரில் ஒரு பிரிவினர், திருநெல்வேலியிலேயே தங்கி, தொடர் விசாரணை மேற் கொண்டுள்ளனர். நேற்று அவர்கள் மீனாட்சிபுரம் கிராமத்தில் விசா ரணை நடத்தினர்.
ராம்குமார் கைதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் விசார ணைக்காக போலீஸாரால் அழைத் துச் செல்லப்பட்டிருந்தனர். கடந்த 2 நாட்களாக அவர்கள் போலீஸ் வசமே இருந்ததால், அவர்களின் வீடு பூட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை ராம்குமாரின் தாயாரும், ஒரு சகோதரியும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
தகவல் அறிந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மீனாட் சிபுரத்துக்கு சென்று, அவர் களிடம் பேட்டி எடுக்க முயன்றனர். உடனே அவர்களின் உறவினர்கள், `மிகவும் மன வேதனையில் இருக் கும் அவர்களை தொந்தரவு செய் யாதீர்கள். தொடர்ந்து தொந்தரவு செய்தால் அவர்கள் தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது’ என கேட்டுக் கொண்டனர். இதனால், செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ராம்குமார் குறித்து பல்வேறு விவகாரங்கள் வெளிவந்த வண் ணம் உள்ளன. ராம்குமார் மீனாட்சி புரத்துக்கு எப்போதாவதுதான் வரு வது வழக்கமாம். இவரது பெரி யப்பா மகன் முத்து என்பவர் மீனாட்சிபுரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள மேக்கரையில் இருக்கிறார். அவரது வீட்டிலிருந்து தான் ராம்குமார் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
கல்லூரிக்கு சென்று திரும் பியபின் மீனாட்சிபுரத்தில் அவரது உறவினர் நடத்தும் பெட்டிக் கடைக்கு சென்று பொருட்களை விற்பனை செய்ய உதவிகள் செய்து வந்துள்ளார். மேலும் தனது தாயா ருக்கு உதவியாக வீட்டில் வளர்க் கும் ஆடுகளை கிராமத்தை சுற்றிலு முள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச் சலுக்காக அழைத்துச் செல்வார்.
படிப்பில் சுமாரான ராம்குமார் அடிக்கடி கல்லூரிக்கு வராமலும் இருந்துள்ளார். மேலும் கல்லூரி யிலும் இவரது நடத்தை சரியில்லா ததால், கல்லூரி நிர்வாகமும் இவரை கண்டித்திருந்ததாக தெரி கிறது. 5 பாடங்களில் அரியர்ஸ் வைத்திருக்கிறார். கல்லூரியிலும் இவருக்கு பெரியதாக நண்பர்கள் வட்டாரம் இருக்கவில்லை.