பிளஸ் 2 ஆங்கிலம் இரு தாள்களும் எளிமை: அதிக மதிப்பெண் கிடைக்கும் என ஆசிரியர்கள் கருத்து

பிளஸ் 2 ஆங்கிலம் இரு தாள்களும் எளிமை: அதிக மதிப்பெண் கிடைக்கும் என ஆசிரியர்கள் கருத்து
Updated on
2 min read

பிளஸ் 2 ஆங்கிலம் தேர்வில் இரு தாள் களும் மிக எளிமையாக இருந்ததாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலம் முதல் தாள் வினாத்தாள் குறித்து, நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் கூறியதாவது: ஒரு மதிப்பெண்ணுக்கான 25 வினாக்களும் எளிதில் விடையளிக்கக் கூடியவை. புத்தகத்தில் இருந்தே கேட்கப் பட்டிருந்தன. இலக்கணப் பகுதியும் மிகவும் எளிமையாகவே இருந்தது.

ஆங்கிலப் மொழிப் பாடத்தை பொறுத் தவரை நூற்றுக்கு, நூறு மதிப்பெண் போடுவதில்லை. அதிகபட்சமாக 99 மதிப்பெண்கள் போடுவார்கள். இந்த முறை அதிக அளவிலான மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. உரைநடை, செய்யுட் பகுதிகளில் இரண்டிலுமே முதல் பாடத்தில் இருந்தே கட்டுரை வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இது ஒரு மனோவியல் ரீதியான விஷயம். எவ்வளவு தான் கற்றல் திறன் குறைபாடுடைய மாணவர்களாக இருந்தாலும், பொதுத் தேர்வுக்கு என வரும் போது முதல் பாடத்தை படித்திருப்பார்கள். அந்த கண்ணோட்டத்தில் அலசினால் இந்த தேர்வில் தேர்ச்சி விழுக்காடு அதிகம் இருக்கும்.

கடந்த 2006-ம் ஆண்டு வடிவமைக்கப் பட்ட பாடத்திட்டம் இது. கடந்த 10 ஆண்டு களில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என ஆண்டுக்கு மூன்று தேர்வுகள் வீதம், இதுவரை 30 தேர்வுகள் நடந்துள் ளன. 30 வினாத் தாள்களும் ஒரு திரளான வினாக்களோடு சுற்றி வருகின்றன. அவற்றை படித்திருந்தாலே போதும். குறிப்பிட்ட சில வினாக்கள் மீண்டும், மீண்டும் கேட்கப்படும். இதை பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லியிருப்பார்கள். அதை சரியாய் படித்தவர்களுக்கு 99 மதிப் பெண் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இவ்வாறு அகஸ்டின் கூறினார்.

ஆங்கிலம் 2-ம் தாள்

பிளஸ் 2 ஆங்கிலம் 2-ம் தாள் தேர்விலும் கேள்விகள் மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததால் அதிகமான மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருப்பதாக, கன்னியாகுமரி மாவட்டம் வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆங்கில ஆசிரியை டி.ஆர்.ஷெர்லி கிரேஸ் கூறினார்.

அவர் கூறியதாவது:

ஆங்கிலம் முதல் தாளைப் போலவே, இரண்டாவது தாளிலும் வினாக்கள் மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. கடந்த 5 ஆண்டு களில் கேட்கப்பட்ட வினாக்களை விட எளிதாக இருந்தன. 10 மதிப்பெண்ணுக் கான ‘லாஸ்ட் லீப்’ கட்டுரைக்கு அனைத்து மாணவர்களுமே பதிலளிக்க முடியும். ‘ப்ரோ வெர்ப்’ வினாக்களும் கடந்த ஆண்டை விட எளிமை யாகவே இருந்தன. சுமாராக படிக்கும் மாண வர்களுக்கு ‘ஸ்டடி ஸ்கில்’சில் கேட்கப்பட்ட இரு வினாக்கள் மட்டும் சற்று குழப்பமடையச் செய்திருக்கும். அதே நேரம் ஓரளவு படிக்கும் மாணவர்கள் கூட இவற்றுக்கு விடையளித் திருக்க முடியும். ஒரு வார்த்தை வினாக் கள் மற்றும் பொது கட்டுரைக்கான வினாக் களும் குழப்பமின்றி கேட்கப்பட்டிருந்தன.

மதிப்பெண் அதிகரிக்கும்

சாதாரணமாக படிக்கும் மாணவர்களும் 50 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் செய்முறைக்கான 20 மதிப்பெண்களை தவிர்த்து 80-க்கு 70 மதிப்பெண்களை சுலபமாக பெறலாம். ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி விகிதம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in