

நாட்றாம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில், கன்னட சினிமா துணை நடிகை சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
கர்நாடக மாநிலம், பெங்களூரு மேற்கு ஜிகாத் மசூதித் தெரு வைச் சேர்ந்தவர் பால்ராஜ் (65) இவரது மகள் ரீகாசிந்து (22). இவர் தொலைக்காட்சி விளம்பரப் படம் மற்றும் கன்னட சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந் தார். சென்னையில் நடைபெற்ற தொலைக்காட்சி படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரீகாசிந்து, நேற்று அதிகாலை பெங்களூரு நோக்கி காரில் சென்றார்.
அவருடன் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அக்சய்குமார் (24), ஜெயகுமார் (23) மற்றும் ரீகாசிந்துவின் தோழி ரக்சா (21) ஆகியோர் சென்றனர். காரை அக்சய்குமார் ஓட்டினார். அதிகாலை 4.30 மணி அளவில் வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த சுண்ணாம்புபேட்டை அருகே வந்த போது, காரின் பின்பக்க டயர் வெடித்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலை யில் தாறுமாறாக ஓடி, சாலையின் தடுப்புக் கம்பியில் மோதி விபத் துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே ரீகாசிந்து பரிதாப மாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர்.