Published : 04 Jan 2017 09:03 AM
Last Updated : 04 Jan 2017 09:03 AM

தமிழகத்தில் 2 கோடியே 80 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 2 கோடியே 80 லட் சத்து 21 ஆயிரத்து 66 பெண் களுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பகப் புற்றுநோய் பரி சோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசு பெண் ஊழியர்களுக்கான தொற்றாநோய்களுக்கான பரிசோதனை முகாம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:

இந்த முகாம் வரும் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகளின் செவிலி யர்கள் மூலம் ரத்த அழுத்தம், உடல் தின்ம பரிசோதனை, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய பரி சோதனைகள் செய்யப்பட உள்ளன. முதல் கட்டமாக இந்த முகாமில் டிஎம்எஸ் வளாகத்தில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள். இது போன்ற முகாம்கள் தேவையின் அடிப்படையில் தொடர்ந்து மற்ற இடங்களிலும் நடத்தப்படும். தமிழ கத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நிலை வரும்வரை இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

தமிழக அரசு புற்று நோயைக் கண்டறிந்து குணப்படத்துவ தற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய்தடுப்பு மற்றும் சிகிச்சை களை செயல்படுத்தி வெற்றிகர மாக நடத்திவருகிறது. இத்திட் டங்கள் மூலம் இதுவரை 1 கோடியே 25 லட்சத்து 93 ஆயிரத்து 393 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும்,1 கோடியே 54 லட்சத்து 27 ஆயிரத்து 673 பேருக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனையும் செய் யப்பட்டுள்ளது. மேலும் தேர்ந் தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கீமோதெரபி சிகிச்சைஅளிக்கும் திட்டமும் மாநில மற்றும் மண்டல அளவில் புற்றுநோய் மையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவரு கின்றன. பரிசோதனைகளோடு மட்டும் நில்லாமல், நோயின் அறிகுறி கண்டவர்கள், மேல்சிகிச்சைக்காக உரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

இந்த முகாமில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை தலைவர் வி.சாந்தா, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநர் செங்குட்டுவன், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வனஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x