Last Updated : 13 Jun, 2016 12:09 PM

 

Published : 13 Jun 2016 12:09 PM
Last Updated : 13 Jun 2016 12:09 PM

குழந்தை தொழிலாளியாக இருப்பது வேதனைக்குரியது: மீட்கப்பட மாணவிகள் உருக்கம்

பள்ளி செல்லும் பருவத்தில் குழந் தைத் தொழிலாளியாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது. குழந் தைத் தொழிலாளர்களை மீட்கவும் அவர்களது கல்விக்கு உதவவும் தாங்கள் உறுதியேற்றுள்ளதாகத் தெரிவித்தனர் குழந்தைத் தொழிலா ளியாக இருந்து மீட்கப்பட்டு உயர் கல்வி முடித்த மாணவிகள்.

போதிய வருமானம் இல்லாத தால் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் பள்ளி செல் லும் வயதில் வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்கள் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் மீட்கப்பட்டு 3 முதல் 5-ம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றனர். பின்னர், இந்த மாணவ, மாணவிகள் அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமான நேற்று திருத்தங்கலில் நடைபெற்றது. இதில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட் கப்பட்டு உயர் கல்வி முடித்து வேலைக்குச் செல்லும் இளைஞர் களும் கலந்து கொண்டு தங்களது நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.

அப்போது திருத்தங்கலைச் சேர்ந்த சண்முகப்பிரியா (22) `தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

அப்பா முத்துகிருஷ்ணன் லுங்கி வியாபாரம் செய்து வருகி றார். அம்மா அமுதா வீட்டில் மாவு விற்பனை செய்து வருகி றார். தொடக்கத்தில் அம்மா வுடன் சேர்ந்து தீப்பெட்டி ஒட்டும் வேலை செய்து வந்தேன். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத் தால் மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டு படித்தேன்.

10-ம் வகுப்பில் 456 மதிப்பெண் களும், பிளஸ்-2-வில் 930 மதிப் பெண்களும் பெற்றேன். பின்னர் வெம்பக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்று தற்போது சென்னை யில் உள்ள பிபிஓ நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணிபுரிகிறேன். வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகள் படிப்புக்காக செலவு செய்வேன். பள்ளி செல் லும் வயதில் வேலைக்குச் செல்வது மிகக் கொடுமையானது என்றார்.

குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு கல்லூரி படிப்பு முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சிவகாசியைச் சேர்ந்த கோதண்டலட்சுமி(22) கூறியது:

வறுமை காரணமாக அம்மா வுக்கு உதவியாக பட்டாசுக்கான பைப் சுற்றும் வேலை செய்து வந்தேன். அப்போது பள்ளியைக் கடந்து செல்லும் போதெல்லாம் கண்ணீர் வரும்.

தேசிய குழந் தைத் தொழிலாளர் திட்டம் மூலம் மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டேன். தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். வருமானம் குறைவாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியை ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவுவேன் என்றார்.

இதேபோன்று குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப் பட்டு உயர் கல்வி முடித்துள்ள திருத்தங்கலைச் சேர்ந்த ரேணு காதேவி, பாண்டிச்செல்வி ஆகியோரும் தாங்களும் வேலை யில் சேர்ந்தவுடன் தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழை மாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய உறுதி ஏற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x