

கறுப்பு பணம் பதுக்கல், சட்ட விரோத பணப் பரிமாற்றம் போன்ற புகார்களின் தொடர்பாக வங்கி மற்றும் அரசு அதிகாரிகளின் வீடு களில் அமலாக்கத்துறை அதி காரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பின்னர் போலியான நிறுவனங் கள் உருவாக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள் ளது. இது குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 1-ம் தேதி இந்தியா முழுவதும் 100 நகரங் களில் சுமார் 300 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை யில் மட்டும் 12 போலி நிறுவனங் களை உருவாக்கி பணப் பரிமாற்றம் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, அந்த நிறுவனங் களிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை மணலியில் ‘கேலக்ஸி இம்பேக்ஸ்’ என்ற பெயரில் இறக்குமதி நிறுவனத்தை போலி யாக உருவாக்கி பணப் பரிமாற்றம் செய்த லியாகத் அலி என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். மேலும், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.20 கோடியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற் றத்துக்கும், கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதற்கும் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உதவி செய்திருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நேற்று இந்தியா முழுவதும் டெல்லி, மும்பை, பெங்களூர், பாட்னா உட்பட 18 இடங்களில் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இரண்டு இடங் களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை பள்ளிக்கரணையில் ஒரு வங்கி அதிகாரியின் வீட்டில் சோதனை நடந்தது குறிப்பிடத் தக்கது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள் என்று அம லாக்கத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.