கணினி ஆசிரியர்கள் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு: சென்னை ஆட்சியர்

கணினி ஆசிரியர்கள் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு: சென்னை ஆட்சியர்
Updated on
1 min read

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொழில் கல்வி கணினி பயிற்றுநர் (அரசு பள்ளி கணினி ஆசிரியர்) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தகுதியுடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

இப்பணியிடத்துக்கு பிஎட் படிப்புடன் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பிசிஏ அல்லது பிஎஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 57. இதற்கான பதிவுமூப்பு விவரம் www.chennai.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

அனைத்து முன்னுரிமை பிரிவினர் - 20.10.2014, எஸ்சி (அருந்ததியர்) - 20.12.2010, எஸ்டி - 3.9.2011, பிசி (முஸ்லிம்) - 17.8.2009, எஸ்சி, எம்பிசி, பிசி, ஓசி - 22.8.2008

மேற்கண்ட உத்தேச பதிவு மூப்புக்கு உட்பட்ட சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் மட்டும் நவம்பர் 3-ம் தேதிக்குள் சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பதிவுமூப்பை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி பதிவுமூப்பு பின்னர் வெளியிடப்படும். இந்த தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in