Published : 19 Sep 2016 10:11 AM
Last Updated : 19 Sep 2016 10:11 AM

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வு: அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்று தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனியார் விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்காக, நேற்று திருப்பூர் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி நதிநீர் விவகாரத் தில், தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கர்நாடகாவில் தமிழர்களின் ஏராளமான சொத்து கள் கொள்ளையடிக்கப்பட் டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக, முதல்வர் ஜெயலலிதா எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே, காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். மேலாண்மை வாரியத்தை அமைக்க, உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், கர்நாடகாவில் வெற்றி பெற வேண்டும் என்பதால், மத்தி யில் ஆளும் பாஜகவும் காவிரி பிரச்சினையில் அக்கறை செலுத் தாது.

தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இதற்கு தமிழகத்தில் நிலவும் எதிரி அரசியல் கலாச் சாரமே காரணம். மத்திய அரசி டம் எம்பிக்கள் அழுத்தம் தர வேண்டும். தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் மக்களை மறந்துவிட்டதால், உரிமைகளை நாம் இழந்துவிட்டோம்.

சிபிஐ விசாரணை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது நடந்த சோதனையில், கரூர் மாவட்டத்தில் அன்புநாதன் வீட்டில் சிக்கிய ரூ.5 கோடி, நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது என்று வருமானவரித் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

மின்வாரியம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கு கிறது. இதற்கு, அமைச்சர்களே காரணம்.

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும். வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்குவது, பெறுவது நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x