நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிக்குமாறு எம்எல்ஏக்களை மிரட்டியதாக கூறுவது அரசியல் உள்நோக்கம்: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி பதில் மனு

நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிக்குமாறு எம்எல்ஏக்களை மிரட்டியதாக கூறுவது அரசியல் உள்நோக்கம்: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி பதில் மனு
Updated on
1 min read

அதிமுக கட்சிக் கொறடா உத்தர வின்பேரில்தான் நம்பிக்கை தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். யாரையும் நாங்கள் மிரட்டி ஓட்டு போட வைக்கவில்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 18-ம் தேதி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவைத் தலைவர் கே.பாலு உள்ளிட்டோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘‘சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தான் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘திமுக உறுப்பினர்களுக்கு எதி ரான வீடியோ பதிவை மட்டும் தணிக்கை செய்து சட்டப்பேரவை செயலாளர் தாக்கல் செய்துள்ளார். அவைக் காவலர்களுக்கான சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் எங்களை வலுக்கட் டாயமாக தூக்கி வந்து வெளியேற் றினர். முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவைத் தலைவர், சட்டப்பேரவை செயலர் செயல்பட்டனர். எனவே அந்த வாக்கெடுப்பு செல்லாது என அறிவித்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரும்பினால் பதில் மனு தாக்கல் செய்யலாம்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 2, 3 தேதிகளுக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டப்படிதான் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கூவத்தூர் விடுதியில் இருந்து நாங்கள் அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டி அழைத்துவந்து நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போடவைத்ததாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது உண் மைக்கு புறம்பானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அதிமுக கட்சிக் கொறடா உத்தரவின்பேரில்தான் நம்பிக்கை தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். யாரையும் நாங்கள் மிரட்டி ஓட்டு போட வைக்க வில்லை. ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசியல் லாபத்துக்காக தாக்கல் செய்துள்ள இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in