

மத்திய அரசைக் கண்டித்து வரும் 28-ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத் தப்படும் என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருச்சியில் தமிழ் மாநில காங்கி ரஸ் விவசாய அணி சார்பில் அதன் மாநிலத் தலைவர் புலியூர் நாக ராஜன் தலைமையில் விவசாயிகள் பாதுகாப்பு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. முன்னதாக, தமிழ் நாட்டில் வறட்சி பாதிப்பால் உயிரி ழந்த விவசாயிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
வார்தா புயல், வறட்சி பாதிப்பு குறித்து மத்தியக் குழு ஆய்வு நடத்திச் சென்ற நிலையில், இது வரை மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. இதைக் கண்டித் தும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கவும், முல்லை பெரி யாறு பிரச்சினை மற்றும் பவானி, பாலாறு ஆகியவற்றில் தடுப்பணை கள் கட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
கருத்தரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் குணசேகரன், மாநிலச் செயலாளர் முகமது அலி, மாவட்டத் தலைவர் அயிலை சிவசூரியன், காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கச் செயல் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.