Published : 24 Jun 2016 07:59 AM
Last Updated : 24 Jun 2016 07:59 AM

மருமகன் கொலை செய்யப்பட்டதால் வழக்கறிஞரை கூலிப்படை ஏவி கொன்ற பெண்

சென்னை புழலில் கடந்த 16-ம் தேதி அகில்நாத்(33) என்ற வழக் கறிஞர் வெட்டி கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலை மையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை செய்து தலைமறைவாக இருந்த சுமன் ராஜ்(22), பவித்ரன்(21), ரோஜாம்மா (59) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் ரோஜாம்மாளின் மருமகன் சிவராஜ் என்பவர் கடந்த 07.01.2016 அன்று கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக அகில்நாத் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. தனது மருமகன் கொலை செய்யப் பட்டதற்கு பழிவாங்குவதற்காக கூலிப்படைக்கு பணம் கொடுத்து அகில்நாத்தை கொலை செய்தி ருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் விஜயகுமார், விக்னேஷ், தினேஷ், பாலாஜி, குமார், காமேஷ்ராஜ், சந்துருகுமார் ஆகிய 7 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x