

தென் தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை ஓரிரு நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே வங்கக் கடலில் காற்று சுழற்சி ஒன்று மையம் கொண்டுள்ளதால், தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வரும் 22-ம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறினார்.
அக்டோபர் 19 வரை தமிழகத்தில் பெய்த மழை, சராசரியைவிட 20 சதவீதம் குறைவாக உள்ளது. வடகிழக்கு பருவ மழையின் ஆரம்ப கட்டத்தில் அதிக மழை பெய்யும்.