

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பேரவைச் செயலாளர் க.பூபதி உள்ளிட்ட இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நேற்று அறிவித்தார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 17-ம் தேதி தொடங்கு கிறது.
இந்நிலையில், மாநிலங்கள்தோறும் தேர்தல் நடத்துவதற்கான உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்துக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் க.பூபதியும், மற்றொரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை இணைச் செயலாளர் பி.சுப்பிரமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறி விப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் கணகாணிப் பாளராக செயல்படுவார். வழக்கமாக குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, பின்பற்றப் படும் நடைமுறைகள் இதிலும் பின்பற்றப் படுகிறது. தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக் கள், தேர்தல் நடக்கும் நாளன்று குறிப்பிட்ட நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். அதன் பின், வாக்குப்பெட்டியை சீலிட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைப்பார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 17-ம் தேதி போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடப்பதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூலை 17-ல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்ப தால், அன்று பேரவைக் கூட்டம் நடக்காது.
எனவே, பேரவை அலுவல் ஆய்வுக்குழு மீண்டும் கூடி, போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை வேறொரு நாளில் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் கணகாணிப்பாளராக செயல்படுவார். வழக்கமாக குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, பின்பற்றப்படும் நடைமுறைகள் இதிலும் பின்பற்றப்படுகிறது.