பன்னீர்செல்வம் ஆதரவாளராக பெரம்பலூர் எம்.பி மாறியது எப்படி?

பன்னீர்செல்வம் ஆதரவாளராக பெரம்பலூர் எம்.பி மாறியது எப்படி?
Updated on
1 min read

பெரம்பலூர் எம்.பி. ஆர்.பி.மருத ராஜா, முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் அணியில் இணைந்தது ஏன் என்பது குறித்து அவருக்கு நெருக் கமானவர்கள் விளக்கமளித்துள் ளனர்.

பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினரான ஆர்.பி.மருதராஜா நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித் தார். இவர் திடீரென ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு தாவியது எப்படி என்பது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியது:

அதிமுகவில் சசிகலா, பன்னீர்செல்வம் என அணிகள் பிரிந்து மல்லுக்கட்டு தொடங்கிய சில தினங்களில் யாரை ஆதரிப்பது என தனது விசுவாசிகளிடம் எம்.பி. மருதராஜா ஆலோசனை நடத்தி வந்தார். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள், பொது இடங் களில் மக்களிடையே நடக்கும் விவாதங்கள் ஆகியவற்றை கடந்த சில தினங்களாக உன்னிப்பாக கவனித்து வந்த அவர், பன்னீர் செல்வத்தை ஆதரிப்பது என்னும் முடிவுக்கு 2 நாட்களுக்கு முன்பே வந்துவிட்டார். மத்திய மண்டலத் தில் உள்ள முக்கிய எம்.பி.யிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அதற்கு அவர், ‘கொஞ்சம் பொறுமை யாக இருங்கள், அதிக எம்.பி.க் களுடன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லலாம், அதற்கு ஏற்பாடு செய்து வருகிறேன்’ என 2 நாட்களாக கூறி வந்துள் ளார்.

ஆனால், அந்த முக்கிய எம்.பி.யை, மன்னார்குடி முக்கிய பிரமுகர் சமாதானப்படுத்தி, சசிகலா அணி ஆதரவாளராக மாற்றிய விவரம் மருதராஜாவுக்கு தெரியவந்தது. அதனால், இனியும் தாமதிக்க வேண்டாம் எனக்கருதிய மருதராஜா நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவாளராக தன்னை இணைத்துக் கொண்டார் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in