

மதுரை நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் பிடிவாரண்ட்டில் கைது செய்யப்பட்டு ஓராண்டாக சிறையில் இருக்கும் 6 பேருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரையில் நாளிதழ் அலுவல கம் ஒன்றில் கடந்த 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ம் ஆண்டில் விடுதலை செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அட் டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேரை யும் மதுரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து இந்த சம்பவத்தில் உயிரிழந்த வினோத் என்பவரின் தாயார் பூங் கொடி, உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுக் கள் மீதான விசாரணையை தாமதப் படுத்தியதால் அட்டாக் பாண்டி யின் கூட்டாளிகள் 12 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் கைது செய்யப் பட்டனர். தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகி யோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல் வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் மோகன் வாதிடும்போது, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களில் தயா முத்து மலேசியாவில் உள்ளார். அவரை தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்க உள்ளோம். இத னால் அவருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளோம் என்றார்.
எதிர்மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ரூபர்ட் பர்ணபாஸ், என்.இளங்கோ ஆகியோர் வாதி டும்போது, இந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றனர்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, இந்த நீதிமன்றம் யாருக்கும் ஜாமீன் வழங்காது. வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றம் செல்லுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் விசாரணையை ஏப். 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.