Published : 16 Oct 2014 04:48 PM
Last Updated : 16 Oct 2014 04:48 PM

காஷ்மீரில் தர்பார் நடைமுறை: ஜம்முவுக்கு மாறுகிறது தலைமைச் செயலகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ‘தர்பார்' நடைமுறை பின்பற்றப் படுவதால், கடந்த ஆறு மாதங்களாக ஸ்ரீநகரில் இயங்கி வந்த மாநிலத் தலைமைச் செயலகம் மாநிலத்தின் இன்னொரு தலைநகரான ஜம்முவுக்கு இடம்பெயர இருக்கிறது.

இம்மாநிலத்தை ஆண்டு வந்த தோக்ரா மகாராஜாவான ரண்பீர் சிங், கோடைக்காலங்களில் இருந்து தப்புவதற்காக ஜம்முவில் இருந் தும், பனிக்காலத்தில் இருந்து தப்பு வதற்காக நகரில் இருந்தும் ஒவ் வொரு ஆறு மாதத்துக்கும் தலை நகரை மாற்ற முடிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து 1872ம் ஆண்டு முதல் சுமார் 141 ஆண்டு களாக இந்த நடைமுறை பின் பற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஜம்முவில் உள்ளவர்களும், காஷ்மீரில் உள்ளவர்களும் தலை நகரை சரிசமமாக அணுக முடியும் என்பதால் இந்தியா சுதந்திரமடைந் ததற்குப் பிறகும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.

அதன்படி, நகரில் இன்னும் சில நாட்களில் பனிக்காலம் தொடங்க இருப்பதால் அங்குள்ள தலைமைச் செயலகம் உட்பட முக்கிய அரசு அலுவலகங்கள்

அனைத்தும் இம்மாதம் 31ம் தேதி மூடப்படும். இவை நவம்பர் 10ம் தேதி முதல் ஜம்முவில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தர்பார் நடைமுறையின் போது, சுமார் 50 அலுவலகங்கள் நகரில் இருந்து ஜம்முவுக்கு இடம்பெயரும். சுமார் 33 சதவீத அலுவலர்களும் இடம்பெயர் வார்கள் என்று கூறப்படுகிறது.

மீண்டும் 2015ம் ஆண்டு மே மாதத்தின் முதல் வாரம் நகரில் அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x