Published : 18 Oct 2014 09:31 AM
Last Updated : 18 Oct 2014 09:31 AM

ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: கொட்டும் மழையில் அதிமுகவினர் கொண்டாட்டம் - கட்சி அலுவலகம், போயஸ் கார்டன் களைகட்டியது

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதுடன் தண்டனையை யும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொட்டும் மழையில் ஆட்டம் போட்டு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

இந்த தகவல் அறிந்ததும் அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பட்டாசுகளுடனும், இனிப்புகளு டன் குவிந்தனர். செல்போன்கள் மூலம் தகவல்களை வேகமாக பரிமாறிக் கொண்டனர். அங்கிருந் தவர்கள் ஒவ்வொருவரும் வாழ்த் துக்களை பறிமாறிக் கொண்டனர்.

அதிமுக தொண்டர்கள் கொட்டும் மழையை பொருட்படுத் தாமல் உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர். ஆண் தொண்டர்கள் அணிந்திருந்த கருப்பு சட்டையை கழட்டிவிட்டு ஆடினர். பட்டாசுகளும் வெடிக்கப் பட்டன.

மூத்த நிர்வாகிகள், அமைச்சர் கள், தொண்டர்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன. தேங்காய் கள் உடைக்கப்பட்டன. கைகளில் கட்சி கொடியும், கட்சி சின்னத் தையும் வைத்துக் கொண்டு ‘அம்மா வாழ்க, அம்மா வாழ்க’ என இரட்டை விரலை காண்பித்தபடி உற்சாகமாக குரல் கொடுத்தனர். பலத்த மழையை பொருட் படுத்தாமல், அவ்வை சண்முகம் சாலையிலும் அதிமுகவினர் உற்சாகமாக மகிழ்ச்சியை கொண் டாடினர்.

அதிமுக 43வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டத்தின் போது, ஜெயலலிதா விடுதலையா கியிருப்பது, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் கூறுகையில், ‘‘ஜெயலலிதாவை பார்க்க முடியாததால் அதிமுக தொண்டர்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது ஜாமீனில் விடுதலை ஆகி வருவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

போயஸ் கார்டனிலும் கொண்டாட்டம்

ஜெயலலிதாவின் வீடு அமைந் துள்ள போயஸ் கார்டன் பகுதியில் காலை முதலே அதிமுகவினர் திரள ஆரம்பித்தனர்.

முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் காலை யிலேயே அங்கு வந்திருந்தார். மேலும் டி.கே.எம்.சின்னையா, பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட அமைச்சர்களும் போயஸ் கார்டன் வந்திருந்தனர். ஏற்கெனவே பரப்பன அக்ரஹாரா வில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வழக்கு விசாரணை நடை பெற்ற போது, தீர்ப்புக்கு முன்பே அதிமுகவினர் ஆடி பாடி கொண் டாடினார்.

இதேபோல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போதும் தீர்ப்புக்கும் முன்பு உற்சாக மாக இருந்தனர். ஆனால் அந்த இரண்டு நாட்களிலும் ஜெயலலிதா வுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. எனவே இந்த முறை நேற்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு விசாரணை நடந்து கொண்டிருந்த போது அதிமுகவினர் பொறுமை யாகவே இருந்தனர். நேற்று மதியம் தீர்ப்பு வெளியான பிறகே அதிமுகவினர் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தீர்ப்பு வெளியானதுமே மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பன்னீர் செல்வம், மதியம் 1.30 மணியள வில் போயஸ் கார்டனிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்.

முதல்வர் மட்டுமன்றி அமைச் சர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளும் பெங்களூர் புறப் பட்டு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x