Published : 01 Jun 2017 08:34 AM
Last Updated : 01 Jun 2017 08:34 AM

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு முடிந்தது

தமிழகத்தில் 571 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்த இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1-ம் தேதி தொடங்கியது. ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதியாக மே 31 நிர்ணயம் செய்யப்பட்டது. இதனையடுத்து, நேற்று இரவுடன் ஆன்லைன் பதிவு முடிவடைந்தது. ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 3-ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்பிக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை ஏறத்தாழ 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். மொத்தம் சுமார் 2 லட்சம் இடங்கள் வரை உள்ள நிலையில், 1.50 லட்சம் பேர் மட்டும் பதிவு செய்துள்ளதால், இந்த ஆண்டும் பல பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீட்டிப்பு இல்லை:

இந்தாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி சில நாட்களிலேயே ஆன்லைன் பதிவு முடிவதால், காலநீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x