

20 நாட்களில் 100 சீமைக் கரு வேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது மாநிலத்திலேயே முதல் முறை என கூறப்படுகிறது.
சீமைக் கருவேல மரங்கள் விவசாயத்தை அழிக்கும் வகையில் உள்ளதால், அவற்றை அழிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்த மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், பெண்ணிடம் தகராறு செய்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திரன் என்பவர் அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனையு டன் முன்ஜாமீன் வழங்கினார்.
“ஜாமீன் பெற்றவர், இன்று முதல் 20 நாட்களுக்குள் அவர் வாழும் கிராமத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களில் 100 மரங்களை அகற்ற வேண்டும். மேலும், 100 சீமைக் கருவேல மரங்களை அகற்றியது குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார்.
இவ்வாறான நிபந்தனையுடன் முன்ஜாமீன் கொடுக்கப்பட்டிருப் பது தமிழகத்திலேயே இது முதல்முறை என அரசு வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.