

தமிழக முதல்வர் கே.பழனிசாமியின் செயலர் ஷிவ்தாஸ் மீனா மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் கே.பழனிசாமி யின் செயலர்களில் ஒருவர் ஷிவ்தாஸ் மீனா. இவர் முன்னதாக தமிழக அரசின் பொதுத்துறை, உணவுத்துறைகளில் செயலராக பணியாற்றியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரா னார். அப்போது அவரது செயலராக இருந்த ஷீலா பிரியா ஓய்வு பெற்றார். தொடர்ந்து மற்றொரு செயலராக இருந்த ராமமோகன ராவ் அப்போது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, முதல்வரின் செயலர்களாக அப்போது உணவுத் துறை செயலராக இருந்த ஷிவ்தாஸ் மீனாவும், கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலராக இருந்த விஜயகுமாரும் நியமிக்கப்பட்டனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபின், கே.பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்ன ரும், முதல்வரின் செயலராக ஷிவ்தாஸ் மீனா பணியாற்றி னார்.
இந்நிலையில், ஷிவ்தாஸ் மீனா, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சக இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால், கூட்டத் தொடர் முடிந்ததும் அவர் மத்திய அரசு பணியில் சேருவார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.