மார்ச் முதல் பெப்சி, கோக் விற்பனை செய்யமாட்டோம்: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

மார்ச் முதல் பெப்சி, கோக் விற்பனை செய்யமாட்டோம்: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு
Updated on
1 min read

மார்ச் மாதம் முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யமாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் மற்றும் கடலூர் மண்டல நிர்வாகிகள் சிறப்புக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

மே 5-ம் தேதி 34-வது வணிகர் தின மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்படும். இதில் 10 லட்சம் வணிகர்களை கலந்துகொள்ளச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கடை களுக்கு விடுமுறை அளிக்கப் படும்.

ஜல்லிக்கட்டு நடத்த போராடிய மாணவர்களுக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட தமிழக முதல்வருக்கும் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் குறித்து வணிகர்களிடம் கருத்து கேட்ட பிறகே மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். சிறிய, நடுத்தர வணிகர்களைப் பாதிக்கும் தொழிலாளர் நலச் சட்டத்தின் விதிகளை தமிழக அரசு மாற்றியமைக்க வேண்டும்.

வெளிநாட்டு குளிர்பானமான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர் பானங்களைப் புறக்கணிக்க வேண்டும் என தொடர்ந்து பிரச் சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மாணவர்கள், இளை ஞர்கள் வெளிநாட்டு நிறுவன மான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளது ஆரோக்கிய மானது. வெளிநாட்டு குளிர்பானங் களைப் புறக்கணிக்க வேண்டும், உள்நாட்டு குளிர்பானங்களை ஊக்குவிக்க வேண்டும் என பிப்ர வரி மாதம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

மார்ச் மாதத்தில் இருந்து வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதைப் புறக்கணிக்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in