

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் தமிழக -கர்நாடக காவல்துறை அதிகாரி கள் பங்கேற்ற மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கை குறித்த கலந் தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் தமிழக காவல் துறையினர் கோவை, நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதியில் தொடர்ச்சியாக கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கென மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு காவல் துறையினர், வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படை காவல் துறையினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு கோவையில் 5 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். மாவோ யிஸ்டுகள் வனப்பகுதியை ஒட்டி யுள்ள காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை தாக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படு வதால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் மற்றும் கடம்பூர் காவல்நிலையங்களுக்கு ஆயுதப்படை காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஆசனூரில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ருபேஸ் குமார்மீனா, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குல்தீப்குமார் ஜெயின் ஆகியோர் தலைமையில் இரு மாநில எல்லையில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், இரு மாநில காவல் துறையினர் இணைந்து செயல் பட்டு மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிப்பது, இரு மாநில காவல் துறையினரிடையே தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தி மாநில எல்லைகளில் நடை பெறும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது என முடிவு செய்யப் பட்டது.