

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையை அடுத்த தில்லை விளாகம் ஓமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல்(63) விவசாயி. அதே ஊரில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார்.
மழை ஏமாற்றியபோதும், குளம், குட்டைகளில் எஞ்சியி ருந்த நீரை இறைத்து பயிர் களைக் காப்பாற்றி வந்தார். எனினும், தண்ணீர் பற்றாக் குறையால் சம்பா பயிர்கள் கருகின. இதனால், மனமுடைந்த ரத்தினவேல் நேற்று காலை வய லுக்கு சென்று சம்பா பயிர்களை பார்த்தவாறு அமர்ந்திருந்த போது, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு வயலில் சுருண்டு விழுந்து இறந்தார். இவருக்கு மனைவி, மகள், 2 மகன்கள் உள்ளனர்.