தூய்மை இந்தியா திட்டம்: திருவள்ளூரில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தூய்மை இந்தியா திட்டம்: திருவள்ளூரில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

தூய்மை இந்தியா திட்டம் மூலம், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் காந்தி ஜெயந்தி அன்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி, காந்தி ஜெயந்தியான நேற்று முன் தினம், தூய்மை இந்தியா என்ற திட்டத்தை டெல்லியில் தொடங் கினார். அந்த தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், காந்தி ஜெயந்தி அன்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தூய்மை பணி கள் மேற்கொள்ளப்பட்டன.

ரயில்வே வாரியத்தின் இயக்கு நர் (அச்சகம்) மகேந்திரன், தென்னக ரயில்வேயின் முதுநிலை கோட்ட மின் பொறியாளர் ஜெயம், திருவள்ளூர் ரயில் நிலைய மேலாளர் மோகன் உள்ளிட் டோர் பங்கேற்ற இந்த தூய்மை பணியில், ரயில்வே ஊழியர் கள், திருவள்ளூர் மற்றும் அதனை யொட்டியுள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளின் மாணவர்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர் உட்பட 375 பேர், காலை ஒரு பிரிவு, மாலை ஒரு பிரிவு என இரு பிரிவுகளாக பங்கேற்று தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

காலை முதல், மாலை வரை திரு வள்ளூர் ரயில் நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மை பணியில் சுவரொட்டி கள் அகற்றப்பட்டன; நடைமேடை மற்றும் தண்டவாளப் பகுதி களில் இருந்த குப்பைகள் அகற்றப் பட்டன. தூய்மை பணியில் பங் கேற்ற மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கு தென்னக ரயில்வே மற்றும் தூய்மை இந்தியா திட்டம் சார்பில் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மட்டுமல்லாமல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர், ஏகாட்டூர், செஞ்சிபனப்பாக்கம், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in