

உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டார்.
அத்துடன், அது முக்கியச் செய்தி அல்ல என்று கூறும் தொனியில் அவர் நடந்துகொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
வேலூரில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அரசியல், தேர்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளிக்கும் பதிலளித்தார்.
அவரிடம் நிருபர் ஒருவர் "நேற்றைய தினம் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடியை பட்டப்பகலில் மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. தமிழகத்தில் இதுமாதிரியான கவுரவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது குறித்து உங்கள் பதில் என்ன?" கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராமதாஸ், "இப்ப போனதெல்லாம்... சொன்னதெல்லாம் சொல்லுங்க... போடுங்க. அப்புறம்.. முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கிறேன்" என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.