Published : 18 Jun 2017 12:01 PM
Last Updated : 18 Jun 2017 12:01 PM

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் சந்திப்பு: எம்எல்ஏக்களுடன் குதிரை பேரம் நடக்கவில்லை- மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை விளக்கம்

ஆளுநர் வித்யாசாகர் ராவை மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை நேற்று சந்தித்து பேசினார். எம்எல்ஏக்களுடன் குதிரை பேரம் எதுவும் நடக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சந்தித்து, சட்டப்பேரவையில் மீண் டும் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவை அதிமுக (அம்மா) கட்சி கொள்கை பரப்புச் செய லாளரும் மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பிதுரை நேற்று காலை 11 மணி அளவில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடம் நீடித்தது. இந்த சந்திப்பின்போது, முதல்வர் பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்ற குதிரை பேரம் எதுவும் நடக்க வில்லை என்று ஆளுநரிடம் தம்பிதுரை விளக்கியதாக கூறப் படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு நிரு பர்களுக்கு தம்பிதுரை அளித்த பேட்டி:

ஆளுநரை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ள நிலையில் நீங்களும் சந்தித்துள்ளீர்களே?

கடந்த வாரமே ஆளுநரை சந்திக்க அனுமதி கோரியிருந்தேன். ஸ்டாலின் சந்திப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதிமுக எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக உங்கள் கருத்து?

இது தொடர்பான வீடியோ காட்சியில் வந்த சட்டப்பேரவை உறுப்பினரே அதை மறுத்துள்ளார். குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சித்தாவல் சட்டம் வந்த பிறகு எந்த எம்எல்ஏவும் கட்சியை விட்டு செல்ல முடியாது. கட்சிக் கொறடா கருத்துக்கு எதிராக வாக்களித்தால் பதவி பறிபோகும். அதனால், குதிரை பேரம் எதுவும் நடக்கவில்லை.

ஆட்சியை கலைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளாரே?

மக்களால் தேர்வு செய்யப் பட்ட ஆட்சி இது. முதல்வர் கே.பழனிசாமி ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. ஆட்சியை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.எப்படியாவது முதல்வராக வேண்டும் என ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது.

அதிமுகவில் 3 அணிகளும் இணையுமா?

அதிமுகவில் அணி என்பது கிடையாது. அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். பிரிந்து சென்றால் அவர்கள் பதவி பறிபோய்விடும். கட்சிக்குள் கருத்து வேற்றுமை வருவது இயல்புதான். ஆட்சியை காப்பாற்றுவது எங்கள் கொள்கை. இதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை.

பேச்சுவார்த்தை குழுவை கலைத்துவிட்டதாக ஓபிஎஸ் கூறும் நிலையில், ஒற்றுமையாக இருக்கிறோம் என கூறுவது முரண்பாடு இல்லையா?

முரண்பாடு இல்லை. முதல்வர் கே.பழனிசாமி அணியில் குழுவை கலைக்கவில்லையே. பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். வேறுபாடுகள் களைந்து ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

அதிமுகவின் தற்போதைய தலைமை யார்?

அதிமுகவில் நாங்கள் ஒன் றாகத்தான் செயல்பட்டு வருகி றோம். சசிகலாவை பொதுச்செய லாளராக தேர்வு செய்தோம். அதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது. பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை நீக்குவதற்கு எங்களில் யாருக்கும் அதிகாரம் இல்லை.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக யார் முடிவெடுப்பார்? பாஜகவை அதிமுக ஆதரிக்குமா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை கட்சியின் முன்னணி தலைவர்கள், முதல்வர் இணைந்து முடிவு செய்வார்கள்.

எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு அதிமுக தயாரா?

யாருக்கும் பணம் கொடுக்க வில்லை. அந்த அளவுக்கு யாரும் தரம் தாழ்ந்துவிடவில்லை. இந்த விஷயத்தில் எதற்கு விசாரணை நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த பிறகு எதிர்க்கட்சிகள் இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் முதல்வர் பழனிசாமி அரசு வெற்றி பெறுமா?

எதற்காக மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏதாவது செய்து முதல்வராக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. அதற்காக ஆட்சி கவிழும் என்கிறார். 90 எம்எல்ஏக்களை வைத்து மைனாரிட்டியாக திமுகவே ஆட்சி நடத்தியபோது, நாங்கள் 123 எம்எல்ஏக்களை வைத்துள்ளோம்.

‘தூக்கமின்றி தவிக்கும் ஸ்டாலின்’

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘ஸ்டாலினை முதல்வர் கனவு தூங்கவிடாமல் செய்கிறது. அதனால், அவர் தூக்கமின்றி தவிக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சைக்கிள் கேப்பில் முதல்வராகி விடலாம் என துடிக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் 123 பேரும் ஒற்றுமையாக இருப்பதால் அவரது கனவு பலிக்காது. அது பகல் கனவாகத்தான் முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x