

கோவை மாவட்டம் தடாகம் சாலை யில் கடந்த மார்ச் 7-ம் தேதி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாடகைக் காரில் அதன் ஓட்டுநர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சாய்பாபா காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட நபர் உதகை சேரிங்கிராஸ் எச்.எம்.டி.சாலையைச் சேர்ந்த எத்தி ராஜ்(61) என்பது தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிப்பது சிரமமாக இருந்தது.
இந்நிலையில், 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது, கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் புன்னாழா பகுதியைச் சேர்ந்த கோழி வியாபாரி அனூப்(26) என்பவர் இக்கொலை யில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கேமரா பதிவுகள்
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை மாநகரப் போலீஸார் நேற்று தெரிவித்த தாவது: கொலையான எத்திராஜ் உதகையைச் சேர்ந்தவர் என உறுதி யானதும், அவரது செல்போன் எண்கள் சோதனையிடப்பட்டன. கடைசியாக 3 வெவ்வேறு எண்களி லிருந்து தாயின் உடல்நிலை சரியில்லை என்ற தகவலை ஒரு நபர் எத்திராஜிடம் கூறியுள்ளார். எனவே தெரிந்த நபராக இருக்கலாம் எனக் கருதி, சேரிங்கிராஸ் பகுதி யில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். மார்ச் 6-ம் தேதி 2 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தையுடன் அவரது காரில் பயணித்தது தெரியவந்தது. எத்திராஜுக்கு முன்விரோதம் ஏதும் இல்லை என்பதால், காரில் சென்றவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது உறுதியானது. அதில் ஒருவரது படத்தை கேமரா பதிவி லிருந்து எடுத்து கோவை, நீலகிரி, கேரளம் உள்ளிட்ட பகுதி போலீ ஸாருக்கு அனுப்பினோம். குற்றச் செயல்களில் தொடர்புடைய, தேடப்படும் நபர் ஒருவரது புகைப் படத்தைப்போல இருப்பதாக கேரள போலீஸார் கூறினர். அதன் பிறகு பத்தனம்திட்டாவில் உள்ள திருவல்லா பகுதியில் சந்தேகத்தின் பேரில் அனூப் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இக்கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.
அனூப்பின் தாயார் வனஜா (எ) லைலா(48) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிஞ்சு (24) என்ற மனைவியும், இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். மனைவி கர்ப்பிணியாக உள்ளார். தாயின் மருத்துவச் செலவுக்காக கடத்தல் மற்றும் வழிப்பறி செய்துள்ளார்.
சுற்றுலாவுக்கு வந்தவர்
இந்நிலையில், நீலகிரியை சுற்றிப் பார்க்க வேண்டுமென அவரது தாயார் விரும்பியதால், அதை நிறைவேற்றுவதற்காக தனது குடும்பத்துடன் நண்பனை யும் அழைத்து வந்துள்ளார். ஏற் கெனவே உதகை வந்தபோது எத்திராஜுடன் பழக்கம் இருந்த தால், இந்த முறையும் அவரது காரி லேயே தொட்டபெட்டா சென்றனர்.
ஓட்டுநர் எத்திராஜுக்கு மாலைக்கண் நோய் இருந்துள்ளது. பனிமூட்டம், இரவு நேரங்களில் அவரால் வாகனத்தை ஓட்ட முடியாது. இதனால் தொட்டபெட்டாவிலிருந்து திரும்பி வரும்போது, அனூப் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அனூப்பின் நண்பர் காரில் புகை புகைபிடித்த தாகவும், எச்சில் துப்பியதாகவும் தெரிகிறது. இதனால் எத்திராஜுக் கும், அனூப்பின் நண்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. தாயாரும், மனைவியும் இல்லாத நேரம் பார்த்து, அனூப் பும், அவரது நண்பரும், காருக்குள் ளேயே வைத்து துப்பட்டாவால் எத்திராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால், வாகனத் தணிக்கை நடப்பதையறிந்து தடா கம் சாலையில் காரை நிறுத்தி விட்டு வேறு வாகனத்தில் தப்பிவிட் டனர். கொலையில் ஈடுபட்ட அவரது நண்பரை தேடி வருகிறோம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனூப்பின் தாயார் வனஜா, நிறை மாத கர்ப்பிணியான மனைவி சிஞ்சு கேரளத்தில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின் றனர். கைது செய்யப்பட்ட அனூப் சிறையில் அடைக்கப்பட்டார்.
‘தாயின் மருத்துவச் செலவுக்காக சிறிய சிறிய குற்றங்களில் ஈடு பட்டு வந்த அனூப், தாயின் விருப் பத்தை நிறைவேற்ற அவரை சுற்றுலா அழைத்து வந்தபோது, ஆத்திரத்தால் எதிர்பாராதவிதமாக கொலையாளியாகவும் மாறியுள் ளார்’ என்கின்றனர் போலீஸார்.