

மாட்டிறைச்சி விவகாரத்தில் மக்களின் உணர்வுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி அதிமுக அம்மா கட்சி சார்பில் பிரமாணப் பத்திரங்கள் தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்காக டெல்லி வந்திருந்த அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ''ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காட்சிப்படுத்தக் கூடாத வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியது போல், மாட்டிறைச்சி விவகாரத்திலும் மக்களின் உணர்வுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், 'மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து மாற்றுவார்கள் என நினைக்கிறோம்' என்றார்.