கருணாநிதி சட்டப்பேரவை வைரவிழா ஜூன் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது: சோனியா, நிதிஷ் குமார், லாலு பிரசாத் பங்கேற்பு

கருணாநிதி சட்டப்பேரவை வைரவிழா ஜூன் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது: சோனியா, நிதிஷ் குமார், லாலு பிரசாத் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழாவில் சோனியா காந்தி, நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திமுக தலைவர் கருணா நிதி, 1957-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் குளித் தலை தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப் பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார். கடந்த 60 ஆண்டு களில் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர் என்ற வரலாற் றுப் பெருமை அவருக்கு உண்டு. அவர் சட்டப்பேரவைக் குள் நுழைந்ததின் 60-ம் ஆண்டு வைர விழாவை திமுக சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளை திமுகவினர் சிறப்பாக கொண்டாடுவர். இந்த ஆண்டு பிறந்த நாளுடன் சேர்த்து கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழாவையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய தலைவர்கள்..

சென்னையில் நடக்கவுள்ள இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு மாநில முதல்வர் களும் பங்கேற்க இருப்ப தாக திமுக செயல் தலை வர் ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.

கனிமொழி நேரில் அழைப்பு

கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழாவில் பங்கேற்குமாறு நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் ஆகியோ ருக்கு மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி நேரில் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முன் தினம் பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு சென்ற அவர், இரு தலைவர்களையும் நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலி னின் கடிதத்தை வழங்கி னார். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய கனிமொழி, ‘‘நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் இருவரும் கருணாநிதி சட்டப்பேரவை வைர விழா வில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர்’’ என்றார்.

கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழாவில் பங்கேற்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர் ஜிக்கு தொலைபேசி மூலம் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய அணிக்கு அச்சாரம்?

குடியரசுத் தலைவர் தேர் தலில் பாஜகவை வீழ்த்த பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பாஜக மற்றும் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சித் தலைவர்களை திமுக அணி திரட்டுவது தேசிய அளவில் புதிய அணிக்கு அச்சாரமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in