

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் மீது காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாசர்பாடியை சேர்ந்த ஏ.ஆர்.பழனி (45) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
''நான் அதிமுகவில் வட சென்னை மாவட்டத்தில் எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் செயலாளராக இருந்தேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1995-ம் ஆண்டு தமிழக கைத்தறித்துறை அமைச்சராக மதுசூதனன் இருந்தார். அப்போது கே.கே நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தரைதள சொத்தை முறைகேடாக ஒதுக்கீடு பெற்று மோசடி செய்துள்ளார். போலியான ஆவணங்கள் மூலம் அரசு துறையை ஏமாற்றிய மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.