போக்குவரத்து போலீஸாக நடித்து வசூல் வேட்டை: இளைஞர் கைது

போக்குவரத்து போலீஸாக நடித்து வசூல் வேட்டை: இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை அருகே போக்குவரத்து போலீஸார் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதி யைச் சேர்ந்த ஆனந்தன் புதுமாமல்லபுரம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் ஆவணங்களை சோதனை செய்வது போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார்.

இதைப்பார்த்த ரோந்து போலீஸார் சந்தேக மடைந்து அவரை நோக்கி சென்றனர். போலீ ஸாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றவரை மடக்கி பிடித்தனர். இவர் போலீஸ் உடை அணிந்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்கும் செயலில் அவர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in