ஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அறிவிப்பு: ஓர் ஆண்டுக்கு பிறகு நடைமுறை

ஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அறிவிப்பு: ஓர் ஆண்டுக்கு பிறகு நடைமுறை
Updated on
1 min read

ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி ஓய்வூதியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டத்தின்படி, ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதம் ரூ.80 ஓய்வூதியத்திலிருந்து அவர் உயிரோடு இருக்கும் வரை பிடித்தம் செய்யப்படும். அவர்களிடமிருந்து முதல் 12 மாதங்கள் பிடித்த பின்னரே இத்திட்டத்தில் இருந்து பயன்பெறுவது நடைமுறைக்கு வரும். அதற்குப் பின்னர் ஓய்வூதியர் இறந்தால் அவருடைய மனைவி அல்லது கணவர் / உயிரோடு இல்லாவிடில் அவர் நியமனம் செய்த நபர் அல்லது வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்துக்கான நியமனப் படிவத்தை குடிநீர் வாரியம் தபால் மூலமாக தனது ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படிவத்தை வாரியத்தின் இணையதளமான> www.chennaimetrowater.tn.nic.in ல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

அக்.15-க்குள் படிவங்களை அனுப்ப வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட படிவம், துணை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், எண்.1, பம்பிங் ஸ்டேசன் ரோடு, சென்னை-2 என்ற முகவரிக்கு அக். 15-க்குள் அனுப்ப வேண்டும். தவறும்பட்சத்தில் ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளதாகக் கருதி தங்களது ஓய்வூதியத்திலிருந்து ரூ.80/-ஐ இந்த மாதம் முதல் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in