Published : 14 Feb 2017 07:45 AM
Last Updated : 14 Feb 2017 07:45 AM

புதிய மருந்து கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்துடன் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. ஒப்பந்தம்

கூட்டு மருத்துவ ஆய்வு, புதிய மருந்து கண்டுபிடிப்பு திட்டங்களுக் காக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்துடன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முயற்சியால் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ் - AYUSH) துறைகளில் புதிய பல கண்டுபிடிப்புகள் மேற்கொள் வதற்காக தேசிய சித்த மருத்துவம் மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அண்மையில் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சித்த மருத்துவம் குறித்து ஆயுஷ் சாரா மருத்துவர்களுக்கான ஒருங் கிணைந்த பயிற்சி முகாம் கிண்டி யில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந் தது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி ஒருவாரம் நடைபெறும் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து துணைவேந் தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி பயிற்சி முகாம் குறித்த கையேட்டை வெளியிட, மத்திய சித்த மருத்துவ ஆராய்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் ஆர்.எஸ்.ராமசாமி பெற்றுக் கொண்டார்.

ஒப்பந்தம் கையெழுத்து

அதன்பின் கூட்டு மருத்துவ ஆய்வு, புதிய மருந்து கண்டு பிடிப்புத் திட்டங்கள், சிறப்பு மருத்துவமனைகள், சித்த மருத் துவ நோய்க்கணிப்பு முறைகளை நெறிப்படுத்துதல், மருத்துவ ஆய்வு நிதியுதவிகளைப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக் காக மத்திய ஆயுஷ் துறையின் கீழ் செயல்படும் மத்திய சித்த ஆராய்ச்சி குழுமத்துடன் பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி முன்னி லையில் கையெழுத்தான ஒப்பந் தத்தின்போது, பல்கலைக்கழகத் தின் பதிவாளர் டாக்டர் டி.பால சுப்பிரமணியன், சித்த மருத்துவத் துறை தலைவர் ந.கபிலன், டாக்டர் மணிகண்டன் உடன் இருந்தனர்.

விரைவில் ஆயுஷ் மருத்து வமனை முகாமை தொடங்கி வைத்து துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி பேசும்போது, “ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த நம்நாட்டு சித்த மருத்துவம்குறித்த விழிப்பு ணர்வை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து நோய்களுக்கும் தேவையான சிகிச்சை முறைகளும், மருந்து களும் நம் பாரம்பரிய மருத்துவத்தில் உள்ளன. நாள்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்று பூரண குணமடையலாம். பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் இலவச சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புறநோயாளி கள் பிரிவானது விரைவில் ரூ.1.69 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x