

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான தியாகி கக்கனின் 108வது பிறந்த நாள் விழா தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட கக்கனின் திருவுருவப் படத்துக்கு தமிழக காங் கிரஸ் தலைவர் சு.திருநாவுக் கரசர், முன்னாள் மாநிலத் தலை வர்கள் குமரி அனந்தன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, காங் கிரஸ் எஸ்.சி. பிரிவுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது தமாகாவில் இருந்து விலகிய பலர் திருநாவுக்கரசர் முன்னி லையில் காங்கிரஸில் இணைந்தனர்.