

அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமியின் வீடு மற்றும் விடுதி களில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
எம்.எல்.ஏக்களை மிரட்டி அடைத்து வைத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். காவல் ஆணையர் அலுவலகத் திலும் சிலர் புகார் கொடுத் தனர். இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப் பிக்கும்படி போலீஸாருக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் விடு திக்கு டிஎஸ்பி மற்றும் தாசில்தார் சென்று எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதேப்போல கிரீன்வேஸ் சாலை யில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டி லும் எம்எல்ஏக்கள் தங்க வைக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அங்கு மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று காலையில் போலீ ஸார் சோதனை நடத்தினர். சேப்பாக்கத்தில் உள்ள சட்ட மன்ற விடுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இங்கு எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.
இந்நிலையில், கலவரம் செய்யும் மற்றும் சிலரை மிரட் டும் நோக்கத்துடன் சுமார் 500 ரவுடிகள் வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்டு சென்னையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அனைத்து விடுதிகளிலும் போலீஸார் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபடும்படியும், ரோந்து போலீஸார் கவனமாக இருக்குமாறும் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் அனைத்து அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் உத்தர விட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் செல்லூர் ராஜூவை காண வில்லை என்று தொகுதி வாக்காளர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதே போல நேற்று அமைச்சர் ஜெயக்குமாரை காண வில்லை என்று பழைய வண்ணாரபேட்டை ரங்கம் மாள் தெருவை சேர்ந்த நவீன் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.