

இடப் பிரச்சினைக்காக பேச்சுவார்த்தை நடத்த வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர், நகை மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திருப்பத்தூர் அடுத்த அம்ப லூர் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் பலராமன் (45). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் திலகா என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக இடப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பொது இடத்தில் பலராமன் சுவர் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு திலகா எதிர்ப்பு தெரிவித் தார். இதில் அவர்களுக்குள் மோதல் அதிகரித்தது. இந்நிலை யில், சென்னையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலராகப் பணியாற்றி வரும் திலகாவின் தம்பி பட்டாபிராமன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அக்காவை பார்க்க புது காலனிக்கு வந்துள்ளார். அவரிடம் பலராமனை பற்றி திலகா கூறியுள்ளார்.
இதையடுத்து, அக்காவுக்கு ஆதரவாகச் சென்ற பட்டாபிராமன் பொது இடத்தில் எழுப்பட்ட கற்களை அப்புறப்படுத்தினார். இதை தடுக்க வந்த பலராமன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டுக்குள் புகுந்த பட்டாபிராமன் வீட்டில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம், 3 பவுன் தங்க நகைகளை அபகரித்துச் சென்றதாக அம்பலூர் காவல் நிலையத்தில் பலராமன் புகார் செய்தார். அதன்பேரில் சென்னை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் பட்டாபிராமன் மற்றும் அவரது அக்கா திலகா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது