

ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடியைச் சேர்ந்தவர் குண்டு எறிதல் வீராங்கனை கவுரி சங்கரி(19). சிவகங்கை மருத் துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜுன் 29-ம் தேதி சீனாவின் யுகாங் நகரில் நடைபெற்ற ஆசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 18 வய துக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்று 13.82 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கம் பெற்றவர்.
முன்னதாக தேசிய அளவில் பெங்களூரு, கொச்சியில் நடை பெற்ற பள்ளி மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கமும், ராஞ்சியில் 2 முறை வெள்ளிப் பதக்கமும், திருவனந்தபுரத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார்.
கவுரி சங்கரியின் தந்தை ஜெயமூர்த்தி தினக் கூலி வேலை செல்பவர். மகளின் மருத்துவப் படிப்புக்கு வட்டிக்கு பணம் வாங்கி கல்லூரியில் சேர்த்துள்ளார். மேலும் நிதி உதவி இல்லாததால் போதிய பயிற்சி பெற முடியாமலும், குடும்ப வறுமை காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமலும் சிரமப்படுகிறார். இதுகுறித்து ‘தி இந்து’ தமிழ் இணையதளம் http://tamil.thehindu.com அதனை தொடர்ந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நட ராஜன் கவுரி சங்கரியின் குடும்ப நிலையை ஆய்வுசெய்து மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியில் இருந்து கல்வி உதவியாக ரூ.20,000 காசோலையை அவரது தந்தை ஜெயமூர்த்தியிடம் வழங்கினார்.
மேலும் கவுரி சங்கரி தொடர்ந்து குண்டு எறிதலில் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்காக தமிழக அரசின் உதவியை பெறுவதற்காக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் ஆட்சியர் எஸ்.நட ராஜன் உறுதி அளித்துள்ளார்.