Published : 04 Sep 2016 10:01 AM
Last Updated : 04 Sep 2016 10:01 AM

பெரம்பலூர் அருகே பசும்பலூர் மாரியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் வழிபட அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மகமாரியம்மன் கோயில் திருவிழாவில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வில் பசும்பலூர் கிராமத்தில்  மகமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா செப்டம் பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழா வில் பங்கேற்று வழிபட தாழ்த்தப்பட்டவர்களையும் அனுமதிக்கக் கோரி அதே ஊரைச் சேர்ந்த கே.சுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மகமாரியம்மன் கோயில் திருவிழா செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆனால் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப் பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். ஏற்கெனவே 1970 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் இந்த திருவிழாவின்போது ஜாதி மோதல் ஏற்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள் ளார். ஒரு சிறுவனின் கை விரல்கள் துண்டிக்கப்பட் டுள்ளன. அதுபோன்ற அசம்பாவிதம் இந்த ஆண் டும் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே தாழ்த்தப்பட்ட வர்களும் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதி, ‘‘கோயில் திருவிழா அமைதியான முறையில் நடக்க அதிகாரிகளுக்கு இரு தரப்பும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்துடன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இந்த கோயிலுக்குள் சென்று திருவிழாவில் பங்கேற்று வழிபட அனுமதிக்க வேண்டும். அதற்கு போலீஸார் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என இந்துசமய அறநிலையத் துறைக்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x