

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட் டில் 14 அரசு வேளாண்மை கல் லூரிகளும், 19 தனியார் இணைப் புக் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை உட்பட 13 பட்டப் படிப்புகளில் 2,600 இடங்கள் உள்ளன.
நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) இடங்களை நிரப்புவதற்கு மே 12-ம் தேதி முதல் கடந்த 11-ம் தேதி வரை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இதில், 36,316 பேர் அளித் துள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்ப தாரர்கள் பெற்ற பிளஸ் 2 மதிப் பெண்கள் அடிப்படையில் தர வரிசைப் பட்டியலை துணைவேந் தர் கு.ராமசாமி நேற்று வெளியிட் டார்.
இதில், நாமக்கல்லை சேர்ந்த எஸ்.தினேஷ்வர் 199.75 கட்-ஆப் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அதே கட்-ஆப் மதிப் பெண்களைப் பெற்று திருச்சியைச் சேர்ந்த ஆர்.தட்சிணாமூர்த்தி 2-ம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட் டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஆர்.மனோஜ்குமார் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தரவரிசைப் பட்டியலை வெளி யிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கூறியதாவது:
முதல் 10 இடங்களில் 8 இடங் களை மாணவர்களும், 2 இடங் களை மாணவிகளும் பெற்றுள்ள னர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 23 சதவீதம் மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். வேளாண்மை படிப்பு மீது உள்ள ஆர்வம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேளாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தப் படிப்புகளில் சேர முடியும். எனவே, விண்ணப்பிக்காதவர்கள் யாரும் அரசு, தனியார் வேளாண்மை கல்லூரிகளை அணுக வேண்டாம்.
தரவரிசைப் பட்டியலின்படி, இவர்களுக்கான கலந்தாய்வு கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், 27 மற்றும் 28-ம் தேதிகளில் சிறப்புப் பிரிவினருக்கும், ஜூலை 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கும் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையும் நடை பெறுகிறது. 2-ம் கட்ட கலந்தாய் வுக்குப் பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங் கப்படும் என்றார்.
முதல் 3 இடங்களைப் பிடித்துள் ளவர்களில் 3-வது இடம் பிடித்த ஆர்.மனோஜ்குமார், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.சாவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவரது தந்தை ரங்கசாமி, உண வகத்தில் வேலை பார்த்து வருகி றார். சிறப்பிடம் பிடித்த 3 மாணவர் களும் மருத்துவப் படிப்பில் சேர விரும்புவதாக தெரிவித்துள் ளனர்.