

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்க தொடர்ந்து உதவ வேண்டும் என்று மலேசிய சிறப்பு தூதர் டத்தோ சாமிவேலுவிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத் தில் நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மலேசியா வுக்கான இந்தியா மற்றும் தெற் காசிய நாடுகள் உட்கட்டமைப்பின் சிறப்பு தூதர் டத்தோ சாமிவேலு சந்தித்தார். அவருடன் மலேசிய நாட்டின் உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
அப்போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது, மலேசிய நாட்டின் சிறப்புத் தூதர் சென்னைக்கு நேரில் வந்து எங் களுக்கு ஆறுதல் கூறியதற்கு தமிழக அரசின் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். தமிழகத் துக்கும் மலேசியாவுக்கும் பல ஆண்டுகளாக நெருங்கிய உறவு கள் உள்ளன. மலேசியாவில் இருந்து தங்களைப் போன்றவர்கள் வருவதன் மூலம் இத்தகைய உறவுகள் வலுப்பெறுகின்றன.
கடந்த 2015- செப்டம் பரில் உலகளவிலான முதலீட் டாளர்கள் மாநாடு சென்னை யில் நடந்தபோது மலேசியாவைச் சேர்ந்த பல்வேறு முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
அப்போது, மலேசியாவின் திம்மா லிங்கட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் உர உற்பத்தியுடன் கூடிய மிதக்கும் நைட்ரஜன் சேமிப்பு எரிவாயு கிடங்கு அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனம் தன் முதலீட்டுக்கான ஏற்பாடுகளை விரைவில் இறுதி செய்ய மலேசிய அரசு உதவ வேண்டும். இதன் மூலம் தென் தமிழகத்தில் பெரிய முதலீட்டுடன் கூடிய ஒரு தொழிற்சாலை அமைவ துடன், இரு நாடுகளுக்கு இடையி லான தொழில்களும் நல்லுற வும் மேம்படும். மேலும், முதலீட்டுத் துறையில் மலேசியாவில் இருந்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகளை அதிகரிக்க நீங்கள் தொடர்ந்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது டத்தோ சாமிவேலு, ‘‘தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இணைந்து செயல்பட ஆவலுடன் இருக்கிறேன்’’ என்றார்.
இந்த சந்திப்பின்போது, மலேசிய சிறப்பு தூதரின் முதன்மை செயலர் இ.சிவபாலன், மலோசியாவுக்கான இந்திய தூதர் அகமது பசாரசம் பின் அப்துல் ஜலீல், தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.