

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் வார்டு பணியாளர்கள், கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நோயாளி களை வார்டுகள், அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவைகளுக்கு அழைத்துச் செல்லும், ஸ்டிரெச்சர் பாய்ஸ் எனப்படும் வார்டுபணியா ளர்கள் 150 பேர் பணிபுரிகிறார் கள். இவர்கள் கடந்த 10 ஆண்டு களாக ஒப்பந்த ஊழியர்களாக பணி புரிந்து வருகிறார்கள்.
வருங்கால வைப்பு நிதி உள் ளிட்ட எவ்வித அடிப்படை சலுகை களும் இல்லாமல், ரூ.2400 மட்டுமே இவர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படு கிறது. இந்நிலையில், வார்டு பணிகளுக்கான ஒப்பந்த நிறுவன மான, ராயல் செக்யூரிட்டி என்கிற தனியார் நிறுவனம், வார்டு பணியாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வியாழக் கிழமை அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 6.30 மணி முதல் நடந்த இந்த போராட்டத்தால் நோயா ளிகள் மிகுந்த அவதிக்குள்ளா யினர். இதனால், போராட்டக் காரர்களை சமாதானப்படுத்திய மருத்துவமனை நிர்வாகத்தினர், ஆறு மாத சம்பளம் உடனே கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, இந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.