Published : 01 Sep 2016 08:13 AM
Last Updated : 01 Sep 2016 08:13 AM

கால்நடைகள் சிகிச்சைக்காக அவசர ஊர்தி சேவை

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கடந்த 5 ஆண்டுகளில் 830 புதிய கால்நடை மருந்தகங்கள், 200 கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1,163 கால்நடை மருத்துவ நிலையக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 2015-16ம் ஆண்டில் நகரும் கால்நடை அவசர ஊர்தி சேவை திட்டம் 5 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் ரூ.37 கோடியே 88 லட்சம் செலவில் மேலும் 27 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் அடைப்பான் நோய் தடுப்பூசி ஆய்வகம் இயங்கி வருகிறது. ரூ.36 கோடியே 66 லட்சம் செலவில் இந்த ஆய்வகம் தரம் உயர்த்தப்படும். இந்த ஆண்டு 113 கால்நடை மருந்தகங்கள், 2 கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் என 115 கால்நடை நிலையங்களுக்கு ரூ.28 கோடியே 92 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.181 கோடியே 17 லட்சத்தில், 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பசுந்தீவன சாகுபடி மேற்கொள்ளப்பட்டன. தரமான பசுந்தீவனம் கிடைக்க ஏதுவாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆட்டுப் பண்ணையில் தீவன உற்பத்தி அலகு, செட்டிநாடு, நடுவூர், ஈச்சங்கோட்டை கால்நடைப் பண்ணைகளில் தீவன கட்டி உருவாக்கும் அலகுகள் ரூ.3 கோடியே 68 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x