

வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, சென்னை வேளச்சேரி சோதனைச் சாவடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கூட்டு வன நிர்வாக பயிற்சி வளாகத்தில், வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நியமன ஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றியும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட வர்களின் தற்காலிக பட்டியல், வனத்துறை இணையதளமான www.forests.tn.nic.in-ல் வெளியிடப் பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியுடைய விண்ணப் பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம், வனத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து, தங்கள் விண்ணப்பத்தில் கோரிய தகுதி முதலானவற்றை உறுதி செய்வதற்காக, அனைத்து அசல் சான்றிதழ்களுடன், நேரில் வந்து கலந்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.