கூடங்குளம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 112 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

கூடங்குளம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 112 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் கூடங் குளம் அருகே கூத்தங்குழி பகுதி யில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 112 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் நேற்று கைப்பற்றினர்.

கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழியில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமண ஊர்வல நிகழ்ச்சியின்போது இரு தரப்பு மீனவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய தில் கூத்தங்குழியை சேர்ந்த சிலர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் 292 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 159 நாட்டு வெடிகுண்டுகளும், டிசம்பர் மாதம் வெடிகுண்டுகள் தயாரிக்க உபயோகப்படுத்தும் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

மீண்டும் இந்த கிராமத்தில் மீனவர்கள் மோதலுக்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் ஏராளமான போலீஸார் கூத்தங்குழி பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு உள்ள கூட்டுறவு சங் கத்தின் பயன்படுத்தப்படாத கட்டி டத்தில் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 112 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன. அவை அனைத்தும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in