

சாதியவாதிகளின் கட்டுப்பாட்டி லுள்ள கோயில்கள் மற்றும் அதன் சொத்துகளை அரசுடை மையாக்க வேண்டுமென்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
பீஹார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தனக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை அவமானத்தைக் குறிப்பிட்டு வேதனைப்பட்டிருக்கிறார்.
பீஹார் மாநில இடைத்தேர்த லின் போது, மதுபானி மாவட்டத்தில் ஒரு கோயிலுக்குச் சென்றதாகவும், கோயிலை விட்டு அவர் வெளியேறிய பின், கோயிலின் நிர்வாகத்தினர் கோயிலைக் கழுவி சுத்தம் செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் கிராமப்புறங்களில் எத்தகைய சாதிக் கொடுமைகளுக்கு உள்ளா கிறார்கள் என்பதை அறிந்துகொள் ளலாம்.
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு சில கோயில்களில் மட்டும்தான் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்யமுடியும் என்ற நிலை உரு வாகியுள்ளது. அதுவும் பெருநகரங் களில் மட்டும்தான் இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது.
நகர் மற்றும் கிராமப்புறங் களிலுள்ள பெரும்பான்மையான கோயில்கள் சாதியவாதிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன. அக்கோயில்களுக் குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையவே முடியாத நிலை உள்ளது. கோயில் விழாக் களில்கூட தலித்துகள் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு சாதிக் கொடுமைகள் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங் களிலும் நிலவுகின்றன.
சாதியத்திற்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மைய, மாநில அரசுகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். சாதியவாதிகளின் பிடியிலுள்ள கோயில்கள், அவற்றின் சொத்து கள் அனைத்தையும் அரசுடைமை யாக்க வேண்டும் என்றார்.