

கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பைச் சேர்ந்தவர் தேவ ராஜன் (64). இவரது மனைவி உஷாராணி (55). இவர்களது மகள்கள் வாணி (29), விஜயலட்சுமி (27), மகன் சிவபாலன் (24). தேவராஜன் இந்து அறநிலையத் துறையில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றியவர். இவர் மீது மோசடி புகார்கள் கூறப்பட்ட தால், ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இத னால் அவருக்கு வரவேண்டிய ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக மனோகரன் என் பவர் பலரிடம் சுமார் ரூ.2 கோடி வரை வாங்கியுள்ளார். தேவராஜன் மூலமாக அந்த பணம் வேறு சிலரிடம் கொடுக் கப்பட்டது. இதில், தேவராஜ னுக்கு கமிஷன் மட்டும் கிடைத் துள்ளது. தேவராஜனிடம் பணத்தை வாங்கிய நபர்கள் வேலையும் வாங்கித் தரா மல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். வேலைக்காக பணம் தந்தவர்கள் போலீஸில் புகார் கொடுக்க, அதன் அடிப்படையில் மோசடி வழக்கில் தேவராஜனை கடலூர் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 3-ம் தேதி கைது செய்தனர்.
பணம் கொடுத்து ஏமாந்த வர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடிக்கடி தேவராஜனின் வீட்டுக்கு வந்து, அவதூறாக பேசியுள்ளனர். இதனால் அவரது மனைவி உஷாராணியும், 2 மகள்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து, மகன், மகள்களை அழைத் துக்கொண்டு, சென்னை எம்ஜிஆர் நகர் அழகிரி தெருவில் உள்ள தன் தங்கை வீட்டுக்கு உஷாராணி வந்தார்.
வீட்டின் மாடியில் உள்ள அறையில் அவர்கள் தங்கி யிருந்தனர். சென்னைக்கு வந்தது முதலே அவர்கள் 4 பேரும் சரியாக சாப்பிட வில்லை. யாரிடமும் சரியாக பேசவும் இல்லை.
இந்நிலையில், நேற்று காலை வெகுநேரம் ஆகியும் மாடியில் உஷாராணி, மகன், மகள்கள் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படவில்லை. தங்கை கணவர், மாடிக்குச் சென்று கதவை தட்டினார். கதவு உள்பக்கம் பூட்டியிருந் தது. பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் எம்ஜிஆர் நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
எம்ஜிஆர் நகர் காவல் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் மின்விசிறி மற்றும் கம்பியில் சேலை, துப்பட்டாவால் தூக்குப் போட்ட நிலையில் உஷாராணி, அவரது மகள்கள் வாணி, விஜயலட்சுமியின் உடல்கள் தொங்கியபடி இருந்தன.
உஷாராணியின் மகன் சிவபாலன், அருகிலேயே தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தாயும் சகோ தரிகளும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண் டது, போலீஸார் கதவை உடைத்து உள்ளே நுழைந் ததுகூட தெரியாமல் அவர் தூங்கிக்கொண்டிருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட அவருக்கு சரியாக பேச்சும் வராது. அவரை போலீஸார் எழுப்பி சில கேள்விகள் கேட்க முயன்றனர். அதை புரிந்துகொள்ளும் நிலையில் கூட அவர் இல்லை.
3 பேரின் உடல்களையும் போலீஸார் கீழே இறக்கி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு அனுப்பினர்.
தேவராஜன் உஷாராணி தம்பதியின் மகள்கள் வாணி, விஜயலட்சுமி இருவரும் எம்.ஏ., எம்.பில். முடித்து பி.எச்டி. பட்டம் பெற்றவர்கள். திருமணம் ஆகாத அவர்கள், தொடர்ந்து வேலை தேடி வந்தனர். தந்தை கைது செய்யப்பட்டது மற்றும் அவதூறு பேச்சுகளால் மன உளைச்சல் அடைந்து சென்னைக்கு வந்தவர்கள், தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.