

வார்தா புயலின் காரணமாக காய் கறிகளின் விளைச்சல் பாதிக்கப் பட்டதால், சென்னை கோயம் பேடு சந்தைக்கு வரத்து குறைந் துள்ளது. இதனால் தக்காளி, வெண் டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் சுமார் 2,000 காய்கறி கடைகள் உள்ளன. இவற்றில் தினமும், காய்கறி விலைக்கு ஏற்ப ரூ.4 கோடி முதல் ரூ.7 கோடி வரை விற்பனை நடக்கிறது. தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், ஊட்டி, ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் இங்கு அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சில காய்கறிகளின் வரத்து குறைந்திருப்பதால், கோயம் பேடு சந்தையில் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நில வரப்படி வெண்டைக்காய் கிலோ ரூ.45, பீன்ஸ் ரூ.35, பாகற்காய் ரூ.30, அவரை, புடலங்காய் ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு ரூ.8-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி விலையும் தற் போது ரூ.20 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க செயலர் பி.சுகுமாரிடம் கேட்டபோது, ‘‘தற்போது விலை உயர்ந்த காய்கறிகள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, விலை வீழ்ச்சியில் இருந்தவை. இந்த காய்கறிகள் பெரும்பாலும் தமிழகத்தில் விளையக்கூடியவை. வார்தா புயலால், தமிழகத்தில் பல இடங்களில் காய்கறி செடிகள் சேதமடைந்தன. அதனால் விளைச் சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந் ததால் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் குறையத் தொடங்கிய தக்காளி விலை, தற் போதுதான் உயரத் தொடங்கியுள் ளது. 80 லோடு வந்த தக்காளி தற் போது 60 லோடுதான் வருகிறது. மற்ற காய்கறிகள் வரத்தும் குறைந் துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும்’’ என்றார்.