

மாணவர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட அவர்களின் பெற்றோரிடம் தனியார் பள்ளி நிறுவனங்கள் அனுமதி கடிதம் கேட்டுள்ளன.
இந்த தடுப்பூசியைப் போட்ட குழந்தைகளுக்கு வாந்தி, காய்ச்சல், மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
இதனையடுத்து தாம்பரம் சுற்றுப்பகுதியில் உள்ள பல தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தைக் கேட்டு, அவர் களுக்கு குறுந்தகவல் அனுப்பப் பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதத்தையும் கேட்டு வருகின்றனர். பெற்றோர் கள் அனுமதி அளிக்கும் குழந்தை களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
இது தொடர்பாக செங்கை சுகாதார மாவட்ட துணை இயக்கு நர் மருத்துவர் பழனி கூறும் போது, “தனியார் மருத்துவ மனைக்கு சென்று இந்த தடுப் பூசியை போட ரூ.500 வரை செல வாகும். அரசு இலவசமாக முகாம் கள் நடத்தி தடுப்பூசி போடுகிறது. வீண் வதந்திகளை நம்ப வேண் டாம். அதேசமயம் குழந்தை களுக்கு தடுப்பூசி போட மறுக் கும் பெற்றோரை வற்புறுத்த வேண் டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது விருப்பமுள்ளவர் களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி பிறகு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.