

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தார்.
தமிழகத்தை புரட்டிப்போட்ட 'வார்தா' புயலால் பல கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் நிவாரண நிதி கேட்பதற்காகவும், பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காகவும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார்.அதன்படி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மோடியை திங்கட்கிழமை டெல்லியில் சந்திக்க உள்ளார்.
'வார்தா' புயல் நிவாரண நிதி, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை, நாடாளுமன்ற வளாகத்தில் ஜெ.சிலை வைக்க கோரிக்கை என்ற மூன்று காரணங்களுக்காக ஓ.பன்னீர்செல்வம்- மோடி சந்திப்பு நடைபெற உள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் ஆளுநரை சந்தித்தார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.