Published : 06 Oct 2014 08:51 AM
Last Updated : 06 Oct 2014 08:51 AM

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது

தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய, 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தது. மேலும், பிரீமியம் ரயில் டிக்கெட் டுக்கு முன்பதிவு செய்ய இணைய தள மையங்களில் மக்களி டம் அதிக கட்டணம் வசூலிக்கப் பட்டது.

தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகளின் நெரிசலை கருத்தில் கொண்டு 12 சூப்பர் பாஸ்ட் மற்றும் பிரீமியம் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், நெல்லை சென்னை எழும்பூருக்கு வரும் 21-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில், நாகர்கோவில் எழும் பூருக்கு வரும் 20-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில், எழும்பூர் நாகர்கோவிலுக்கு வரும் 24-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில், எழும்பூர் நெல்லைக்கு வரும் 27-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில், கோவை சென்ட்ரலுக்கு வரும் 21-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் கோவை, எழும்பூர் நெல்லைக்கான பிரீமியம் ரயில் களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கும் என அறிவிக்கப் பட்டது.

அதன்படி, இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் எடுக்க சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் அதிகாலை முதலே மக்கள் காத்திருந்தனர்.

நேற்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன் பதிவு தொடங்கிய 20 நிமிடத் தில் ரயில் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டன.

இணையதள மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்:

பிரீமியம் ரயில்களுக்கான முன்பதிவு காலம், 15 நாட்களுக்கு மிகாமல் இருக்கும். ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக மட்டுமே இவ்வகை ரயில்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு செய்ய முடியாது. மேலும், பிரீமியம் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் முறை கிடையாது. பயணச்சீட்டை ரத்து செய்தாலும், கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. மேலும், முதியோருக்கான கட்டண சலுகை உட்பட எந்த சலுகைகளும் பிரீமியம் ரயில்களில் கிடையாது.

இதுதவிர, மற்ற ரயில்களில் உள்ளதை போன்ற பொதுப்பெட்டி எனப்படும் முன்பதிவு செய்யப் படாத பெட்டிகள் பிரீமியம் ரயில்களில் இடம்பெறாது.

இந்நிலையில், பிரீமியம் ரயில் களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமான மக்கள் நேற்று ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க வந்திருந்தனர். ஆனால், சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்களுக்கு மட்டுமே கவுன்டர்களில் டிக்கெட் புக்கிங் செய்யப்படும் என அறிவித்ததால், ஏமாற்றத்துடன் இணையதள மையங்களை நோக்கி மக்கள் வேகமாக புறப்பட்டனர்.

அங்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.80 முதல் ரூ.160 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x